×

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ரூ.38.80 கோடி சொத்து

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து மாநிலங்களவைக்கு 4 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். அதில் அவரது குடும்ப சொத்து விவரம் தொடர்பாக பிரமாண பத்திரம் கொடுத்துள்ளார்.

அதில் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் மொத்தம் ரூ. 6.59 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன. அவரது மனைவியிடம் மொத்தம் ரூ. 4.41 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன. இதில், கார்கே பல்வேறு வங்கிகளில் மொத்தம் ரூ. 5.25 கோடி வைப்புத்தொகை வைத்துள்ளார். அவரது மனைவியிடம் மொத்தம் ரூ. 2.84 கோடி வைப்புத்தொகை உள்ளது. மல்லிகார்ஜுன் கார்கேவிடம் மொத்தம் ரூ. 8.30 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களும், அவரது மனைவியிடம் ரூ. 9.85 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களும் உள்ளன. கார்கே குடும்பத்தின் பெயரில் சுமார் ரூ. 9.22 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளன.

Tags : Congress ,Mallikarjuna Kharge ,Bengaluru ,Rajya ,Sabha ,Karnataka Legislative Assembly ,All India Congress ,President ,
× RELATED பினராயி விஜயனின் மகளுக்கு விரைவில் சம்மன்