×

யானை தாக்கி டிஜிபி மனைவி பலி

குடகு: கர்நாடகாவில் காபி தோட்டத்தில் வேலைகளைப் பார்வையிட்டபோது ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் டிஜிபியாக பணியாற்றி வரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுனில் அச்சய்யாவின் மனைவி சந்தியா அச்சய்யா, கோனனகட்டே கிராமத்தில் உள்ள தனது காபி தோட்டத்தில் பணிகளை ஆய்வு செய்யச் சென்றார். அப்போது அங்கிருந்த காட்டு யானை ஒன்று அவரைத் திடீரெனத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதல்வர் டி.கே.சிவகுமார், சுனில் அச்சய்யாவைத் தொடர்புகொண்டு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

Tags : DGP ,Kodagu ,IPS ,Karnataka ,Kodagu district ,
× RELATED தீவிரமடையும் நெருக்கடிகள் பொருளாதார நிலை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை