×

ராஜபாளையம் அருகே மரத்தில் தொங்கிய சடலம்: பொதுமக்கள் அதிர்ச்சி

ராஜபாளையம், ஜூன் 6: ராஜபாளையம் அருகே மரத்தில் தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜபாளையம் அருகே தென்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து வீரப்பன்(42). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கீழ ராஜகுலாராமன் காவல் ஆய்வாளர் பூமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

முத்து வீரப்பனின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் மனச்சிதைவு நோயால் அவதிப்பட்டு மருந்து எடுத்துக் கொண்டதாகவும் அதில் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொத்தனார் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : Rajapalayam ,Muthu Veerappan ,Thenkarai ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி படுகாயம்