×

உலக சுற்றுச்சூழல் தின விழா

ஆண்டிபட்டி, ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று, தேனி மாவட்ட வன அலுவலர் கிரண் அறிவுரையின்படி, ஆண்டிபட்டி வனச்சரக அலுவலர் அருள்குமார் தலைமையில், ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வனத்துறையின் சார்பில் 400 இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் மரக்கன்றுகளை கைகளில் ஏந்தி, காலநிலை மாற்றத் தணிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, காலநிலை மாற்றத்தைத் தணிப்பதில் மரங்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், மாணவர்கள் பள்ளி மைதானத்தில் மரக்கன்றுகளை கைகளில் ஏந்தியபடி \”SAVE OUR PLANET\” என்ற ஆங்கில எழுத்து வடிவில் வரிசையாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளர் லோகேஷ் குமார் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் ரங்கராஜன் முன்னிலை வகித்தார். மேலும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

 

Tags : World Environment Day Festival ,Antipatti ,World Environment Day ,Teni District Forest Officer ,Kiran ,Andipatti ,Wildlife ,Officer ,Arulkumar ,Government Men ,Secondary School ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி படுகாயம்