×

ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வசூல் ரூ.1.72 கோடி

ராமேஸ்வரம், ஜூன் 6: ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியே 72 லட்சத்தை தாண்டியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அம்பாள் திருக்கல்யாண முன் மண்டபத்தில் நேற்று உண்டியல் வசூல் எண்ணப்பட்டது.

கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் திறப்பில் ராமநாதசுவாமி கோயில் உண்டியல், உபகோயில், யானை பராமரிப்பு, திருப்பணி உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட ரூ.1 கோடியே 72 லட்சத்து 97 ஆயிரத்து 286, தங்கம் 32 கிராம், வெள்ளி 2 கிலோ 200 கிராம் மற்றும் 138 அயல்நாட்டு பண நோட்டுகள் வசூலாகி இருந்தது.

 

Tags : Rameswaram temple ,Rameswaram ,Ambal Thirukalyana Mandapam ,Rameswaram Ramanathaswamy Temple ,Chellathurai… ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி படுகாயம்