×

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 6: மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை ஆனையூர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி துணை செயலாளர் திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கேகே சாமி மற்றும் நிர்வாகிகள் வீரனசிங்கம், பாலமுருகன் சந்திரசேகர், நந்தாசிங் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிக சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும், ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 

Tags : Union Government ,Madurai ,Communist Party of India ,Anaiyur ,Area Deputy Secretary ,Tirupati ,District Secretary ,KK Samy ,
× RELATED அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.23...