×

நாகலாபுரம் வட்டாரத்தில் பலத்த காற்றுடன் மழை

 

விளாத்திகுளம், ஜூன் 25: விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இம்மாதம் தொடக்கம் முதல் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்காத நிலையில் விளாத்திகுளம் தொகுதி முழுவதும் பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. ஆனால் திடீரென மேகமூட்டம் உருவாகி விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை மட்டும் பெய்தது. நாகலாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 4.30 மணி முதல் 5 மணி வரை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியுடன் காணப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 

Tags : Nagalapuram ,Vlathikulam ,Budur ,
× RELATED குளத்தூர்- சிப்பிகுளம் சாலையில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு