×

ஆமை வேகத்தில் சென்னை 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: மக்கள் அதிருப்தி

சென்னை: த.வெ.க அரசு பொறுப்பேற்ற பின் பூந்தமல்லி, வடபழனி இடையே ரயில் சேவையை தொடங்குவதில் காலதாமதம் ஆவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ. 63.246 கோடி மதிப்பில் 116 கிலோ மீட்டர் தொலைவில் மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி மாதவரம் – சிறுசேரி வரை 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 4-வது வழித்தடத்திலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெறுகின்றன.

கடந்த தி.மு.க. ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. ஆனால், த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு மெட்ரோ ரயில் திட்டங்கள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. தேர்தலுக்காக வடமாநிலங்களுக்கு சென்றவர்கள் குறைந்த அளவே பணிக்கு திரும்பியதால் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த மெட்ரோ பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒட்டு மொத்தமாக, ஏப்ரல் வரை 52% சதவீதம் மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. குறிப்பிட்ட காலத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று பூந்தமல்லி முதல் போரூர், வடபழனி தடத்தில் பணிகள் நிறைவடைந்து 5 மாதங்கள் ஆகியும் ரயில்சேவை தொடங்காததால் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

Tags : Chennai ,Turtle ,Poonthamalli ,Vadpalani ,
× RELATED முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின்...