கோவை: கோவையில் பைனான்சியரை கொலை செய்த செல்போன் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். கடனை திருப்பி தரக் கேட்டு தகராறு செய்ததால் பைனான்சியரை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். பைனான்சியர் அபுதாகிர் பாஷாவை கொலை செய்து, உடலை சாக்கடையில் வீசிய வட மாநில இளைஞர் நர்பத் சிங் கைது செய்யப்பட்டார்.
