×

அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் 19,485 மாணவர்கள் சேர்க்கை

ஈரோடு, ஜூன் 4: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் புதிதாக நடப்பாண்டு 19,485 மாணவ-மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்று (4ம் தேதி) முதல் திறக்கப்பட்டு, 2026-27ம் கல்வியாண்டுக்கான 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. முதல் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு புத்தகம், நோட்டு, சீருடை, காலணி மற்றும் கல்வி உபகரண பொருட்கள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. நடப்பாண்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் 19,485 சேர்க்கை நடை பெற்றதாக பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையினர் கூறியதாவது:மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு தமிழ் வழியில் 2,377, ஆங்கில வழி 1,250 பேரும், 2ம் வகுப்பு தமிழ் வழி 66, ஆங்கில வழி 24 பேரும், 3ம் வகுப்பு தமிழ் வழி 71, ஆங்கில வழி 32 பேரும், 4ம் வகுப்பு தமிழ் வழி 47, ஆங்கில வழி 35 பேரும், 5ம் வகுப்பு தமிழ் வழி 39, ஆங்கில வழி 14 பேரும், 6ம் வகுப்பு தமிழ் வழி 1,739, ஆங்கில வழி 1,187 பேரும், 7ம் வகுப்பு தமிழ் வழி 123, ஆங்கில வழி 164 பேரும் சேர்ந்துள்ளனர். 8ம் வகுப்பு தமிழ் வழி 136, ஆங்கில வழி 140 பேரும், 9ம் வகுப்பு தமிழ் வழி 1,474, ஆங்கில வழி 684 பேரும், 10ம் வகுப்பு தமிழ் வழி 85, ஆங்கில வழி 30 பேரும், பிளஸ் 1 தமிழ் வழி 5,679, ஆங்கில வழி 4,048 பேரும், பிளஸ் 2 தமிழ் வழி 16, ஆங்கில வழி 25 பேரும் என மொத்தம் தமிழ் வழியில் படிக்க 11,852 மாணவ-மாணவிகளும், ஆங்கில வழியில் படிக்க 7,633 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 19,485 மாணவர்கள் சேர்ந்துள்ளனர், என கூறினர்.

Tags : Erode ,Tamil Nadu ,
× RELATED விஜய்க்கு ஏன் வாக்களித்தோம் என பொதுமக்கள் உணர்ந்திருப்பார்கள்