×

எலந்தகுட்டை மேட்டில் 75.80 மி.மீட்டர் மழை பொழிவு

ஈரோடு,ஜூன்2: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில், எலந்தகுட்டை மேட்டில் 75.80 மில்லி மீட்டர் மழை பொழிந்தது. ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்ததும், பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது.

இதில், எலந்தகுட்டை மேட்டில் அதிகபட்சமாக 75.80 மில்லி மீட்டர் மழை பொழிந்தது. இதேபோல் மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் பின்வருமாறு: ஈரோட்டில் 0.40, மொடக்குறிச்சியில் 2.20,பெருந்துறையில் 3, சென்னிமலை 3.40,பவானியில் 13, கவுநத்ப்பாடியில் 2.60, அம்மாபேட்டையில் 5.40, வரட்டுப்பள்ளம் அணையில் 7.40, கோபியில் 7.20, எலந்தகுட்டை மேட்டில் 75.80, பவானிசாகர் அணையில் 15.40 என மாவட்டத்தில் சராசரியாக 7.99 மில்லி மீட்டர் மழை பொழிந்தது.

Tags : Elanthakuttai Mett. ,Erode ,Erode district ,Elanthakuttai Mett ,Agni star heat wave ,
× RELATED விஜய்க்கு ஏன் வாக்களித்தோம் என பொதுமக்கள் உணர்ந்திருப்பார்கள்