×

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மின்னணு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி துவக்கம்

 

 

திருச்சி: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்வராக பொறுப்பேற்றவுடன் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை, அவர் ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இடைத்தேர்தலுக்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.  அதன்படி முதற்கட்டமாக இடைத்தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளை முதல்நிலை சரிபார்க்கும் பணி இன்று காலை தொடங்கியது.

இதற்காக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பிரத்திக் தயாள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் பெல் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியை கலெக்டர் பிரத்திக்தயாள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags : Trichy East ,Trichy ,Tamil Nadu ,Tevag ,Vijay ,Chennai Perambur ,MLA ,Chief Minister ,
× RELATED அரசின் வளர்ச்சிப் பணிகளை...