×

பேராவூரணியில் நாளை ஜமாபந்தி துவக்கம்

பேராவூரணி, ஜூன் 3: பேராவூரணி வட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் பொருட்டு, 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தஞ்சை கலெக்டர் தலைமையில் பேராவூரணி தாலுகா அலுவலகத்தில் ஜூன் 4ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது குறித்து பேராவூரணி தாசில்தார் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;

பேராவூரணி வட்டத்திற்கான ஜமாபந்தி ஜூன் 4ஆம் தேதி நாளை (வியாழக்கிழமை) பெருமகளூர் உள்வட்டத்திற்கும், ஜூன் 5 குருவிக்கரம்பை உள்வட்டத்திற்கும், ஜூன் 9ல் ஆவணம் உள்வட்டத்திற்கும் மற்றும் ஜூன் 10 பேராவூரணி உள்வட்டத்திற்கும் நடைபெறுகிறது. மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 10 மணிக்கு பேராவூரணி தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நடைபெறும்.

இதில் நில உடைமையாளர்கள் பட்டாமாறுதல் மற்றும் நிலங்கள் குறித்த எல்லைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் குறித்தும், பொதுமக்கள் வீட்டுமனை ஒப்படை மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுதல் போன்ற கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக வழங்கிப் பயன்பெறலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Jamabandhi ,Peravoorani ,Village Administrative Officers ,Peravoorani taluk ,Revenue Audit ,Peravoorani Taluk Office ,Thanjavur Collector ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...