- சோழமாதேவி கிராமம்
- தா.பழூர்
- Cholamadevi
- அறிவியல் மையம்
- க்ரீடு வேளாண் அறிவியல் மையம்
- அரியலூர் மாவட்டம்
- அஸ்ஹுக்…
தா.பழூர், ஜூன் 3: சோழமாதேவி கிராமத்தில் அறிவியல் மையத்தின் சார்பில் விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடக்கிறது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் ஜூன் மாதத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் 5ம்தேதி இளமங்கலம் கிராமத்தில் காளான் வளர்ப்பு பயிற்சியும்,
8ம்தேதி மருவத்தூர் கிராமத்தில் மக்காச்சோள சாகுபடி பற்றிய பயிற்சியும், 11ம்தேதி படநிலை கிராமத்தில் துல்லிய பண்ணை திட்டம் பற்றிய பயிற்சியும், 19ம்தேதி வேளாண் அறிவியல் மையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சியம், 23ம்தேதி கீழ மாளிகை கிராமத்தில் நாற்றங்கால் உற்பத்தி மற்றும் விற்பனை வாய்ப்பு முறைகள் பற்றிய பயிற்சிகள் நடைபெற உள்ளது. என விவசாயிகள் தங்கள் பகுதியில் நடைபெறும் பயிற்சிகளில் கலந்து கொண்டு தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
