×

தென்மேற்கு பருவமழை எப்போது துவங்கும்..? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

டெல்லி: நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை நாளை மறுநாள் அதாவது ஜூன் 4-ஆம் தேதி வாக்கில் கேரளா மற்றும் தமிழகப் பகுதிகளில் தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கூறி இருக்கிறது. கேரளத்தை மையமாக வைத்து வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி துவங்கும் தென்மேற்கு பருவமழை, நடப்பாண்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சற்று தாமதமாக ஜூன் 4-ஆம் தேதி துவங்க கூடும் என தெரிகிறது. அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பருவமழை தீவிரமடைவதற்கேற்ற காற்று மற்றும் வளிமண்டல சூழல் நிலவுவதாக வானிலை மையம் கூறியிருக்கிறது.

பருவமழை தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கேரள நிலப்பரப்பில் தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதாக IMD கூறியுள்ளது. மேலும் கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை விரிவடைய கூடும்.

இதன் காரணமாக அடுத்த 6-7 நாட்களுக்கு, கேரளாவில் ஆங்காங்கே கனமழை முதல் மிகக் கனமழை வரையும் (7-20 செ.மீ), தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஆங்காங்கே கனமழையும் பெய்யவும் மிக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags : Meteorological Survey Center ,Delhi ,Indian Meteorological Centre ,IMD ,Kerala ,Tamil Nadu ,
× RELATED உள்ளாட்சி அமைப்புகளில் 11 மாவட்ட...