பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய பிரச்னைகள், கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரின் செல்போன் வாட்ஸ் அப் நெம்பரான 94441 75000 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வாய்ஸ் மெசேஜ் மூலமாக தெரிவிக்கலாம்.
கலெக்டர்… பயோ டேட்டா
கலெக்டர் சரண்யா அறியின் அப்பா அறிவழகன் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஆவார். அம்மா சத்யா ஒய்வுபெற்ற அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியை. கணவர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி அரியலூர் எஸ்பியாக உள்ளார். 2015ம் ஆண்டு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வானையம் (UPSC) நடத்திய தேர்வில் அகில இந்திய அளவில் 7வது இடமும், தமிழ்நாடு அளவில் முதலிடமும் பெற்று 2016ம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்தடுக்கப்பட்டவர். கோவை மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியராகவும், பத்மநாபபுரம் சார் ஆட்சியராகவும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும், சென்னை மாநகராட்சியில் மண்டல துணை ஆணையராகவும் பணியாற்றியவர்.
வாழ்த்திய ஊழியர்கள்
புதிய கலெக்டர் பொறுப்பேற்ற போது, பெரம்பலூர் வருவாய் அலுவலர் கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சொர்ண ராஜ், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், தாசில்தார் சத்திய மூர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
