×

வெள்ளாற்றில் சேமிப்பில் உள்ள மணலை வீடு கட்டும் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்

 

அரியலூர், மே 26: அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே உள்ள வெள்ளாற்றில் சேமிப்பிலுள்ள மணலை, வீடு கட்டும் பயனாளிகளுக்கும், மாட்டு வண்டிதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டர் ரத்தினசாமியிடம் மனு அளித்தனர். தமிழ் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலர் முடிமன்னன் தலைமையில் அப்பகுதி மாட்டு வண்டி உரிமையாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; வெள்ளாற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணல் குவாரி இயங்கி வந்தது. அப்போது சுமார் 1,500 டன் மணல் சேமித்து வைக்கப்பட்டது.அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதாக வந்த புகாரையடுத்து, ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையினர் குவாரியை ஆய்வு செய்ததையடுத்து, குவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Tags : Ariyalur ,Ariyalur District R. S. ,Ratnasamy ,Ghalat ,Matur ,Tamil Empire Party ,
× RELATED பொன்பரப்பி மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா