×

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் மிருணாளினி தகவல்

பெரம்பலூர்,மே 28: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (29ஆம் தேதி) நடைபெறவுள்ளது என மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தகவல். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (29ஆம் தேதி) அன்று காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத் திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Perambalur ,Collector ,Mrinalini ,District Collector ,
× RELATED சிபிஎம் தலைவர்கள் மீது தாக்குதல்...