×

நாளை கலைஞர் பிறந்த நாள் நெல்லை மேற்கு மாவட்ட திமுகவினர் மரியாதை

நெல்லை, ஜூன் 2: முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை மரியாதை செலுத்தப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா நாளை (3ம் தேதி ) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை மேற்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை வார்டு பகுதிகளில் கட்சி கொடியேற்றுவதோடு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். நிகழ்ச்சிகளில் மாவட்ட, மாநில நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர பேரூர் கிளை வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாது பங்கேற்று பிறந்தநாள் விழாவை சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

Tags : Nellai West District DMK ,Kalaignar ,Nellai ,Chief Minister ,Avudhaiappan ,DMK ,President ,M K… ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது