- முத்துபேட்டை
- திருவாரூர்
- மாவட்டம்
- முத்துப்பேட்டை நகர சபை
- உரட்ச்யா யூனியன்
- கனோலிடத்
- மன்னார்குடி
- கோட்டூர்
- Tirupathur
- Mangudi
- கடுவெலி
முத்துப்பேட்டை, ஜூன் 2: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் இணைப்புகளுக்கு கொள்ளிடத்தில் இருந்து மன்னார்குடி, கோட்டூர், திருப்பத்தூர், மாங்குடி, கடுவெளி, சங்கேந்தி வழியாக எடையூர் சம்புக்கு வந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் மெயின் பைப் லைன் வழியாக முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி குடிநீர் டேங்குகளை சென்றடைகிறது. பின்னர் அருகில் இருக்கும் ஊராட்சி கிராமப் பகுதிகளுக்கு பைப் லைன் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
மேலும் அந்தந்த பகுதி ஊராட்சிகளில் உள்ள கிணறு குளம், போர்வெல் பகுதியில் சொந்த முயற்சி குடிநீர் எடுக்கும் திட்டங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் கோடை காலத்தில் அதிகளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துப்பேட்டை பகுதியில் சமீப காலமாக கடும் வெயில் காணப்படுகிறது. இதன் காரணமாக குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி வறண்டு வருகிறது. இதனால் மக்களுக்கு பல்வேறு தேவைகளுக்கு பயன்படும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்ட நிலையில் முத்துப்பேட்டை பகுதியில் பரவலாக குடிநீரும் கடும் தட்டுபாடு ஏற்ப்பட்டுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கும் நோக்கில், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், பணியாளர்கள், குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி இயக்குபவர்கள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம் எம்பி வை.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகையன் பேசுகையில், கிணறு மற்றும் ஊற்று போர்வெல் மூலம் கிடைக்கும் குடிநீர் திட்டம் போதிய பராமரிப்பு இல்லாமல் செயல்படாமல் உள்ளது. அவைகளை சீரமைத்தாலே இது போன்ற குடிநீர் தட்டுப்பாடு நேரத்தில் அந்த குடிநீர்களை மக்களுக்கு வழங்கி சமாளிக்கலாம்.
குறிப்பாக, உதயமார்தாண்டபுரத்தில் உள்ள ஒரு கேணி பராமரிப்பு இன்றி உள்ளது அதனை சீரமைத்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கலாம் இதனை அதிகாரிகள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதில் நாகை எம்பி வை.செல்வராஜ் பேசுகையில், கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் அந்தந்த ஊராட்சியில் கிடைக்கும் குடிநீரை முறையாக பயன்படுத்தி மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தற்போது உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போர்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்ய உரிய அதிகாரிகளை சந்தித்து நிரந்தரமாக தட்டுப்பாடு என்று குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து பேசுகையில், இங்கு ஊரக வளர்ச்சித்துறை குடிநீர் வடிகால் வாரியம் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் வந்துள்ளனர் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு கூட்டு முயற்சியில் தற்பொழுது உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குடிநீர் மக்களுக்கு கட்டுப்பாடு என்று கிடைக்க அனைவரும் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.
