×

வலி நிவாரணி மாத்திரை விற்பனை: பிரபல ரவுடி உட்பட 2 பேர் கைது

பெரம்பூர்: சென்னை எம்கேபி. நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் கடந்த 24ம் தேதி இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி இளையகுமார் (37), விக்னேஷ் (21) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 40 வலி நிவாரணி மாத்திரைகள், 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை சப்ளை செய்த சென்னை பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (34) தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், நேற்று ராஜ்குமாரை கைது செய்தனர்.

சென்னை தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்திற்கு உட்பட்ட திடீர் நகர் பகுதியில் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றபோது ஒருவரை பிடித்து சோதனை செய்து 42 வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் ராயபுரம் யானைகுளம் 2வது தெருவை சேர்ந்த சலாவுதீன் (22) என்பதுதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்துவந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Perampur ,Chennai ,MKB ,Inspector ,Chandrasekhar ,Nagar Erukhacheri highway ,Ilayakumar ,Vignesh ,
× RELATED ஹரியானாவில் உள்ள TBRL ஆய்வகத்தில்,...