×

ஆடவர் பிரிவில் ஸ்வெரவ் அபாரம்

பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ், பிரான்ஸ் வீரர் குவென்டின் ஹேலிஸ் உடன் மோதினார். முதல் இரு செட்களில் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரவ், அந்த செட்களை, 6-4, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார்.

3வது செட்டில் சுதாரித்து துடிப்புடன் ஆடிய ஹேலிஸ், 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். இருப்பினும் 4வது செட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய ஸ்வெரவ், அந்த செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். அதனால், 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய ஸ்வெரவ் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags : Sverav Abaram ,FRENCH ,OPEN MEN ,YESTERDAY ,ALEXANDER SVERAU ,QUENTIN HALIS ,Sverav ,Atacasa ,
× RELATED ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தோல்வி