மும்பை: தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டு கசிந்த வீடியோ குறித்து நடிகை ஹன்சிகா கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார். மலையாள நடிகையும், யூடியூபருமான ஹன்சிகா கிருஷ்ணா (20), தனது கட்டண சந்தாதாரர்களுக்கான பிரத்யேக பக்கத்தில் ரகசிய அந்தரங்க வீடியோ ஒன்றை தவறுதலாக பதிவேற்றம் செய்தார். பின்னர் தனது தவறை உணர்ந்து சில நிமிடங்களிலேயே அந்த வீடியோவை அவர் நீக்கிய போதிலும், அதற்குள் சில சந்தாதாரர்கள் அதனை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டனர்.
இந்த சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விளம்பரத்திற்காகவும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகவும் அவர் திட்டமிட்டே இந்த வீடியோவை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த சர்ச்சை குறித்து மவுனம் கலைத்துள்ள ஹன்சிகா கிருஷ்ணா, ‘நான் செய்த முட்டாள்தனமான மற்றும் கவனக்குறைவான முடிவிற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இது விளம்பரத்திற்காகவோ அல்லது பணம் சம்பாதிப்பதற்காகவோ செய்யப்பட்ட காரியம் அல்ல; எனது சகோதரி அகானா கிருஷ்ணா இயக்கிய பூக்கள் என்ற இசை வீடியோ வெளியான சில நாட்களிலேயே இந்த சர்ச்சை எழுந்தது வருத்தமளிக்கிறது. எனது சகோதரியின் கடின உழைப்பையும் புகழையும் கெடுக்கும் வகையில் ஒருபோதும் செயல்பட மாட்டேன். இந்த சம்பவத்திற்கு பிறகு என் குடும்பத்தினரை குறிவைத்து ஆபாசமான வார்த்தைகளால் சிலர் சமூக வலைதளங்களில் கொடூரமாக விமர்சித்தனர்.
இதனால் சந்தா செலுத்தும் முறையை முற்றிலும் நிறுத்த நினைத்தேன், ஆனால் புதிய சந்தாதாரர்களை தவிர்க்கும் பொருட்டு தற்காலிகமாக சந்தா கட்டணத்தை 299 ரூபாயில் இருந்து 399 ரூபாயாக உயர்த்தியுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
