டெல்லி: காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, கிழியாத மற்றும் தண்ணீரில் நனையாத ப்ளாஸ்டிக் (பாலிமர்) நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அச்சிடும் செலவைக் குறைக்கவும், நோட்டுகளின் ஆயுளை அதிகரிக்கும் நோக்கில், முதற்கட்டமாக ரூ. 10, ரூ.20 நோட்டுகளில் இதை சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
