புதுடெல்லி: சிபிஎஸ்இயின் ஓஎஸ்எம் முறைகேடு பற்றி பிரதமர் மோடி எந்த விளக்கமும் சொல்லாமல் மவுனமாக இருப்பது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், “சிபிஎஸ்இ மூன்று முறை ஓஎஸ்எம் டெண்டர்களை வெளியிட்டது. முதல் முறை எந்த நிறுவனமும் டெண்டர் கோரவில்லை. 2வது முறை விண்ணப்பித்தவர்களில் தகுதியான ஒரு நிறுவனம் கூட இல்லை.
இதனால், கோயம்ப்ட் நிறுவனத்துக்கு ஆர்டர் தரவேண்டும் என்ற ஒரே நோக்கில் தகுதிகளை குறைத்து 3வது டெண்டர் வெளியிடப்பட்டது. இந்த டெண்டரில் 3வது சுற்று பரிசீலனை வரை டி.சி.எஸ் நிறுவனம் இருந்தது. பின்னர் அது தகுதி நீக்கம் செய்யப்பட்டு தெலங்கானாவில் பல சர்ச்சைகளில் சிக்கி மாணவர்கள் தற்கொலைக்கு காரணமான கோயம்ப்ட் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்படப்பட்டது ஏன், எப்படி?
மேலும், “இ்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மோடி தனது அரசாங்கத்தை காப்பற்றி கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார். அவருக்கு லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பற்றி கவலை் இல்லை” என குற்றம்சாட்டி உள்ளார்.
