×

8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

ஈரோடு, மார்ச் 4:  ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும், நிலைக்கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களிடம் தேர்தல் தொடர்பான புகார் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் கதிரவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் நிலைக்கண்காணிப்பு குழுக்கள் (எஸ்.எஸ்.டி) மற்றும் பறக்கும் படை குழுக்கள் (எப்.எஸ்.டி) அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் நேரடியாக அந்த தொகுதி பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழுக்களிடம் அளிக்கலாம்.

அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க 97917-33356, 97917-33364 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல் ஈரோடு மேற்கு தொகுதிக்கு 97917-33350, 91917-33389, கோபி தொகுதி 97917-44496, 97917-55508, பவானிசாகர் தொகுதி 97917-22250, 97917-66675, அந்தியூர் தொகுதி 97917-44492, 97917-22245, பவானி தொகுதி 97917-11137, 97917-51110, பெருந்துறை தொகுதி 97917-44429, 97917-11165, மொடக்குறிச்சி தொகுதி 97917-11160, 97917-44475 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Flying Squadron and Monitoring Committees ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...