தங்கம் விலையில் திடீர் மாற்றம் பவுனுக்கு ரூ.1200 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் சரிந்தது

சென்னை: தங்கம் விலையில் நேற்று திடீரென பவுனுக்கு ரூ.1200 குறைந்தது. இதே போல வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் சரிந்தது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 17,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலை மேலும் அதிரடியாக சரிவை சந்தித்தது.

அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் நேற்று சரிவை சந்தித்தது. அதன்படி, வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.285க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.85 லட்சத்துக்கும் விற்பனையானது. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

Related Stories: