×

குட்கா விற்றவர் கைது

திருச்சி,மே 28: ஸ்ரீரங்கம் பகுதியில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மே.26ம் தேதி அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையம் அருகே குட்கா விற்ற புத்தூர் பகுதியை சேர்ந்த காமராஜ் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 11 கிலோ 590 கிராம் குட்கா பறிமுதல் செய்தனர்.

 

Tags : Trichy ,Srirangam ,Srirangam… ,
× RELATED அரசு மருத்துவமனையில் தாலியை பறித்தவர் கைது