×

திருத்துறைப்பூண்டி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு

திருத்துறைப்பூண்டி, மே 28: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பகுதிகளில் எம்எல்ஏ மாரிமுத்து வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம், சென்ற இடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ மாரிமுத்து வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருத்துறைப்பூண் ஒன்றியத்தில் மேலமருதூர், பிச்சன் கோட்டகம், ஆதிரெங்கம்,

கட்டிமேடு, சேகல், கொருக்கை, கொக்கலாடி, பாமணி, நெடும்பலம், நுணக்காடு, எழிலூர், கொத்தமங்கலம், விளக்குடி, ராயநல்லூர், திருப்பத்தூர் பனையூர் கோமமாளப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அப்போது சென்ற இடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், திமுக ஒன்றியசெயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜவகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Tags : Patrapundi ,MLA Marimuttu ,MLA Marimutu ,COMMUNIST ,THIRUTARAPUNDI ,THIRUWARUR DISTRICT ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது