×

பயிர் கடன் முழுமையாக வழங்காத அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

வலங்கைமான்,மே 28: வலங்கைமான் கடைவீதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் தமிழக அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடியை அனைவருக்கும் முழுமையாக அறிக்க வேண்டும் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் பூசாந்திரம், சிபிஐ ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், சிபிஎம் ஒன்றிய செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடியை தமிழக முதலமைச்சர் மறு பரிசீலனை செய்து விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒன்றிய பாஜ அரசு உர விலையை வாபஸ் பெறவும், விவசாயத்திற்கான உரங்கள் அனைத்தையும் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலியமூர்த்தி, சேகர், விஜயகுமார், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

Tags : Tamil Nadu ,Valangaiman ,Valangaiman Kadayveethi ,Communist Party ,Tamil Nadu government ,Tiruvarur district ,Communist Party of India ,Marxist… ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது