×

முன்னாள் படைவீரர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, மே 28: 2025-26ம் கல்வியாண்டில் 1 முதல் பட்டப்படிப்பு வரை பயிலும் முன்னாள் படைவீரர்கள், கைம்பெண்களின் குழந்தைகளுக்கு மத்திய முப்படைவீரர் வாரியத்தால் (KSB)-ல் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் முன்னாள் படைவீரர்கள்/கைம்பெண்கள் 30.11.2026 வரை www.ksb.gov.in இணையதள முகவரி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

 

 

Tags : Pudukkottai ,Central Servicemen Board ,KSB ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது