- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- AIADMK எம்.எல்.ஏக்கள்
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம்
- இந்திய தேர்தல் ஆணையம்
சென்னை: அதிமுகவை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எம்எல்ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். அந்த 4 தொகுதிகளும் காலியாகியுள்ளதாக தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. காலியாக உள்ள தொகுதிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அறிக்கையை அனுப்பியுள்ளது.
ஏற்கனவே திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ள நிலையில், தற்போது அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 4 தொகுதிகள் சேர்ந்து மொத்தம் 5 தொகுதிகள் காலியாகியுள்ளன. இதற்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
