×

சீர்மரபினர் நலவாரியத்திற்கு இணையதளம்

 

தூத்துக்குடி, மே 28: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவு, கல்வி, திருமணம், மகப்பேறு போன்றவற்றுக்கான உதவித்தொகை, மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள்,

அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்புசாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர். இந்த நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி www.dncwb.tn.gov.in, http://www.dncwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Thoothukudi ,District ,Collector ,Vishu Mahajan ,Seermarabiner Welfare Board ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது