- பினராயி விஜயன்
- திமுக தலைவர் கே. ஸ்டாலின்
- சென்னை
- முதலமைச்சர்
- கேரளா
- முதல் அமைச்சர்
- பினராய் விஜயன் கே. ஸ்டாலின்
- திமுக தலைவர்
- மு. கே. ஸ்டாலின்
- பினராய்
சென்னை: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்துவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத் துறை ரெய்டுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை ஏவிவிடும் இத்தகைய போக்கு மிகவும் தவறானது. பினராயி விஜயன் ஏன் இதுவரை பாஜகவால் குறிவைக்கப்படவில்லை எனப் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த சில காங்கிரஸ் தலைவர்களின் கூற்றுகள் பொருளற்றவை என்பதையும் இந்த ரெய்டுகள் அம்பலப்படுத்தியுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
