×

திருப்பதியை போன்று பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆன்லைன் முறையில் டிக்கெட், நேர கட்டுபாடு நடைமுறை: அறநிலையத்துறை அமைச்சர்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்பட முக்கிய கோயில்களில் பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் விரைவில் ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்கும் நடைமுறை மற்றும் நேரக்கட்டுபாட்டு முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இக்கோயிலில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:
25.05.2026 அன்று நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துறைச் செயலாளர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., ஆணையர் பி. என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

கட்டண சீட்டு வழங்கல் மற்றும் கூட்ட மேலாண்மை
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை, நேர ஒதுக்கீட்டு முறை, பக்தர்கள் கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, தரிசன மேலாண்மை மற்றும் கட்டணசீட்டு விநியோக ஒழுங்குமுறை போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், இம்முறையை முதற்கட்டமாக முதுநிலை திருக்கோயில்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி பின்னர், மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

திருக்கோயில் பாதுகாப்பு
திருக்கோயில் நகைகள், சிலைகள், ஆபரணங்கள், திருக்கோயில் சொத்துகள் மற்றும் தொன்மையான பொருட்களை பாதுகாத்தல் ஆகியவை குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.
திருக்கோயில் நிலங்கள் மற்றும் இனாம் நிலங்கள் திருக்கோயில் நிலங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இனாம் நிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் தனிப்பட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

நலத்திட்டங்கள் ஆய்வு
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களின் நடைமுறை நிலை ஆய்வு செய்யப்பட்டு. பக்தர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அறநிலையத்துறை கல்வி நிறுவனங்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள், மாணவர் நலன், கல்வித் தரம் மற்றும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன. இறுதியாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில் நிர்வாகத்தை மேம்படுத்துதல், கோயில் பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் பக்தர்கள் நலனை பாதுகாத்தல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் சீ.ரமேஷ் தெரிவித்தார்.

Tags : Tirupathi ,Minister of State ,Chennai ,Trinchendoor ,Murugan Temple ,Palani Dandayudapani Temple ,Madurai Meenakashi Amman Temple ,Srirangam ,Ranganathar Temple ,Thiruthani Murugan Temple ,Tiruvannamalai ,Arunachale ,Swarar Temple ,
× RELATED லாரி மோதி படுகாயம் அடைந்த உணவக...