×

சேலத்தில் சட்டவிரோதமாக மது விற்ற தனியார் தங்கும் விடுதி

சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்ப பெரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் சேலத்தில் இன்று டாஸ்மாக் மூடப்பட்டுள்ளன.

மேட்டூரில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் தனியார் தங்கும் விடுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடைவிதிகளுக்கு அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிகளுக்கு உள்ளாகினர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மதுபிரியர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags : Salem ,Tasmac ,Mettur ,
× RELATED தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும்...