சென்னை: மாணவர்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்: முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியின் போது கோடை வெயிலைக் கருத்தில்கொண்டும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்றும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது என்றும் இம்முறையை தற்போதைய அரசும் தொடர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். வெயிலின் தாக்கம் குறையும் வரையில், வகுப்புகளைத் தொடங்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் நலன் மிக முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
