×

நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

 

புதுக்கோட்டை, மே 26: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்கூட்டத்தில் 518மனுக்கள் குவிந்தன அந்த மனுக்கள் மீது உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 518 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Pudukkottai ,Pudukkottai district ,Public Grievance Redressal Day ,Pudukkottai District Collectorate ,Collector ,Aruna… ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது