- விதை
- புதுக்கோட்டை
- விதை சான்றிதழ்
- சாந்தி
- வனதிராயன்பட்டி கிராமம்
- வைரலிமலை தொகுதி,
- புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை, மே 26: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரம், வானதிராயன்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏசுஐ 4 எள் இரகம் (2.5-ஏக்கர்) விதைப்பண்ணையை விதைச்சான்று இணை இயக்குநர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பயிரிடப்பட்டுள்ள பயிர்களைப் பார்வையிட்டு தரத்தினை உறுதிப்படுத்துவதற்கான ஆலோசனை வழங்கியதுடன், தரமான விதைகள் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைத்திட சன்றுப்பணிகளை விரைந்து முடித்திட விதைச்சான்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இவ்வட்டாரத்தில் உள்ள விவசாயிகளை இயற்கை வேளாண்மை மேற் கொள்வதற்காக ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கான ஊக்கத்தொகை மானியம் மத்திய, மாநில அரசுகளின் திட்டங் களையும் எடுத்துரைத்தார்.
