×

டாஸ்மாக் கடையை அகற்றகோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

 

 

நாகப்பட்டினம், மே 26: கீழையூர் அருகே தையான் தோப்பு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே தையான் தோப்பு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை கீழையூர் அச்சுகரை செல்லும் பிரதான சாலையில் உள்ளது. இந்த கடையை அகற்ற கோரி அப்குதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது: தையான் தோப்பு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை கீழையூர் அச்சுகரை செல்லும் பிரதான சாலையில் உள்ளது. இந்த கடை யில் மதுபானம் வாங்கும் குடிமகன்கள் சாலையோரத்தில் நின்று மது அருந்துவது பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளிடம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

Tags : TASMAC ,Nagapattinam ,TASMAC shop ,Thayan Thoppu village ,Keezhayur ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது