- நெடுஞ்சாலைகள் துறை
- அத்தனக்கோட்டை
- கந்தர்வகோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- கரம்பக்குடி
- திருவரங்குளம்
- புதுக்கோட்டை-தஞ்சாவூர் நெடுஞ்சாலை
கந்தர்வகோட்டை, மே 25: புதுக்கோட்டை மாவட்டத்தின் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருவரங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முந்திரி சாகுபடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, புதுக்கோட்டை – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆதனக்கோட்டை பகுதி, முந்திரி விற்பனைக்கு புகழ்பெற்றது. பண்ருட்டி முந்திரியை விட அதிக சுவை கொண்டதாகக் கருதப்படும் இங்குள்ள முந்திரிகள், இயந்திரங்கள் இன்றி இன்றும் பாரம்பரிய முறையில் பதப்படுத்தப்படுகின்றன. மண்பானையில் மணல் இட்டு, விறகு அடுப்பில் வறுக்கப்படும் போது பிரியும் அந்த முந்திரிப் பால், தனித்துவமான நறுமணத்தையும் நீண்ட நாள் கெடாத தன்மையையும் தருகிறது.
