- புதுக்கோட்டை மாவட்ட தபால் நிலையம்
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- மத்திய அரசின் தபால் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை…
புதுக்கோட்டை, மே 25: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகரவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வணிகம் செய்வதற்காக நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்களாக செயல்பட விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவோர், செய்யும் வணிகத்துக்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். வயது வரம்பு: 18 வயது நிரம்பியவர்கள், அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. நேரடி முகவர் பணிக்கு வேலை இல்லாதோர், சுய தொழில் புரிவோர், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.
