×

புதுகை மாவட்ட வெடிபொருட்கள் உற்பத்தி, விற்பனை நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

 

புதுக்கோட்டை, மே 25: புதுக்கோட்டை மாவட்டம் வெடிபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல். மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடிபொருட்கள் உற்பத்தி நிலையங்களில் வெடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை கலந்து உடனடியாக வெடியாக மாற்றிவிட வேண்டும். வெடிப்பொருட்களுக்கான கலவையை இருப்பில் வைத்திருக்க கூடாது. அனைத்து வெடிபொருட்கள் உற்பத்தி நிலையங்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவிலான மூலப்பொருட்கள் மட்டுமே சேமித்து வைக்கப்பட வேண்டும்.அனைத்து வெடிபொருட்கள் உற்பத்தி நிலையங்களிலும் மூலப்பொருட்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சரக வருவாய் ஆய்வாளரால் வாரம் இருமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

Tags : Pudukkottai ,Pudukkottai district ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது