×

போலீசார் கொடி அணிவகுப்பு

பென்னாரம், மார்ச் 4: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பென்னாகரத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி  நடைபெறுகிறது. அரசியல் கட்சினர் இடையே மோதலை தடுக்கவும், வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கும் துணை ராணுவம், ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 150க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். இவர்கள் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், உரிய பாதுகாப்பு வழங்குவதை உணர்த்தும் வகையிலும், தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், நேற்று மாலை போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.

பென்னாகரம் அரசு மருத்துவமனை அருகே தொடங்கிய அணிவகுப்பை, தர்மபுரி கூடுதல் எஸ்பி குணசேகரன் தொடங்கி வைத்தார். இதில் பென்னாகரம் டிஎஸ்பி சவுந்தர்ராஜன், இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், தண்டபாணி, லதா மற்றும் எஸ்ஐகள், போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கலந்துகொண்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த அணிவகுப்பு, பென்னாகரம் பஸ்நிலையம், கடைவீதி, தாலுகா அலுவலகம் வழியாக ஏரியூர் பிரிவு ரோட்டில் நிறைவடைந்தது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா