சாத்தூர், மே 22: சாத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே இ.முத்துலிங்காபுரத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.7 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. தொழிற்பயிற்சி நிலையத்தில் முதல்வர், பயிற்றுனர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளனர். 250 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தொழிற்பயிற்சி நிலையம் மதுரை- கன்னியாகுமாரி நான்கு வழிச்சாலையில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அங்கு செல்வதற்கு போதிய சாலை வசதி இல்ைல. இருக்கும் சாலையும் கற்கள் பெயர்ந்து மாணவர்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என தொழிற்பயிற்சி நிர்வாகம் பல முறை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தும் சாலை அமைக்கப்படவில்லை.
