- ராஜபாளையம்
- விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை
- உதவி இயக்குனர்
- சுகதரஹிமார்
- சேத்தூர்
- வருவாய் ஆய்வாளர்
- காமராஜ்
- மேலூர் துரைசாமிபுரம் கிராம நிர்வாக…
ராஜபாளையம், மே 22: ராஜபாளையம் அருகே விதிமீறி செயல்பட்ட குவாரியில் இருந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விருதுநகர் மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சுகதாரஹிமர் தலைமையில் சேத்தூர் வருவாய் ஆய்வாளர் காமராஜ், மேலூர் துரைச்சாமிபுரம் கிராம நிர்வாக அலுவலர் சஞ்சீவிராஜ் ஆகியோர் மேலூர் துரைச்சாமிபுரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் நடத்தி வரும் குவாரியை புல தணிக்கை செய்தனர். அதில் குவாரிக்கான குத்தகை ஒப்பந்த பத்திரம் அரசிடம் பெறாமல் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு இயங்கிவந்த இரண்டு கிட்டாச்சியை கைப்பற்றி சேத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கக் கோரி சுகதாரஹிமர் புகார் மனு அளித்தார். புகாரின் பேரின் ராஜபாளையம் தொழிலதிபர் காமராஜ் மனைவி செல்வி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
