×

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: பாட வாரியான தேர்ச்சி சதவீத விவரங்கள்…

சென்னை: தமிழகத்தில் இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. 10-ஆம் வகுப்பு பொது தேர்வை இந்த ஆண்டு சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், மொத்தம் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தமிழ், ஆங்கிலம் உட்பட மொத்தம் 5 பாடங்களில் எவ்வளவு சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர் மற்றும் பாடவாரியாக மொத்தம் எவ்வளவு மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்து உள்ளனர் என்ற விவரங்களை கீழே பார்க்கலாம்…

தமிழ் பாடத்தில் 98.43% மாணவர்களும், ஆங்கிலத்தில் 99.44% மாணவர்களும் , கணிதத்தில் 97.36% மாணவர்களும், அறிவியலில் 98.00% மாணவர்களும், சமூக அறிவியலில் 97.93% மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

அதே நேரம் தமிழ் பாடத்தில் 34 பேரும், ஆங்கிலத்தில் பேரும் 92, கணிதத்தில் 3,194 பேரும், அறிவியல் பாடத்தில் 10,476 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 3,336 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று உள்ளனர். ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 17,132. ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2,774 ஆகும்.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: 94.31% பேர் தேர்ச்சி