×

திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளுக்கு அபராதம்: மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

 

சிவகாசி, மே 20: திருத்தங்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த லாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் ரூ.3.69 கோடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் சுகாதார வளாகம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நடத்துநர் ஓய்வு அறை, குடிநீர் வசதி என பல்வேறு வசதிகளுடன் இந்த பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்ட ஒரு சில வாரங்கள் மட்டும் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டில் இருந்தது. அதனை தொடர்ந்து இந்த பஸ் ஸ்டாண்ட் முழுமையாக தொடர்ந்து இயங்கவே இல்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே இந்த பஸ் ஸ்டாண்டில் ஏராளமான லாரிகள் இரவு பகலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து புகாரின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் சரவணன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டில் திடீரென ஆய்வு செய்தனர்.

Tags : Sivakasi ,Revitangal ,Municipal ,Correctional Centre ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது