லக்னோ: வரும் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி தொடரும் என்றும் வெற்றியை மையமாக கொண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்டார். அப்போது வரவிருக்கும் தேர்தலிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரசாரம் செய்வீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்த அகிலேஷ் கூறியது:
சமாஜ்வாடி கட்சி பல கூட்டணிகளை அமைத்துள்ளது. எங்களுக்குக் கூட்டணிகளில் அனுபவம் உண்டு. சமாஜ்வாடி கட்சி எப்போதும் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு லாபத்தை உறுதி செய்துள்ளது. ஒருபோதும் யாருக்கும் நாங்கள் துரோகம் செய்ததில்லை. இன்று இருக்கும் கூட்டணி இனியும் தொடரும். கூட்டணியில் இடங்களைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை. மக்களவைத் தேர்தலின்போதும், பிரச்னை இடங்களைப் பற்றியது அல்ல, வெற்றியைப் பற்றியதுதான் என்று நான் கூறியிருந்தேன். அதே சூத்திரம் மீண்டும் கையிலெடுப்போம். வரும் தேர்தலிலும் கேள்வி இடங்களைப் பற்றியதாக இருக்காது. வெற்றியைப் பற்றியதாகவே இருக்கும்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவினால்பாதிக்கப்பட்ட 22 லட்சம் ணவர்களில் ஒவ்வொருவருக்கும் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் எனக் கணக்கிட்டால், கிட்டத்தட்ட 1.1 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், சுமார் நான்கு லட்சம் மாணவர்கள் உபியை சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பத்தினர் 22 லட்சம் பேர் உள்ளனர். மிக பெரும் கட்சியான பாஜவை எதிர்த்து போட்டியிடுவதால் தேர்தல் உத்திகள் குறித்து இப்போது கருத்து எதுவும் கூற மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.
