×

கூரையில்லாமல் அருளும் வெக்காளியம்மன்

*ஸ்ரீ பூலூரு அம்மன்
வெயிலில் ஏற்படும் நோயிலிருந்து காப்பாற்றும் அம்மன் கோயில்கள் பல உண்டு. அதில் வெயில், மழை இரண்டையும் தன்னுடைய திருமேனியில் தாங்கிக் கொண்டு மேற்கூரை இல்லாமல் காட்சி அளிக்கும் வெயில் உகந்த அம்மன் கோயில்களும் சில உண்டு. அதில் ஒன்றுதான் அருப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீ பூலூரு அம்மன் கோயில். தனிக் கோயிலில் சாமுண்டியுடன் மேற்கூரை இல்லாத தனி சந்நதி ஒன்றில் தன் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். 800 வருடங்களுக்கு முன்பு கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட வணிகர் ஒருவர் தென்காசி பக்கம் வியாபாரத்துக்குப் போயிருந்தபோது அற்புதக் காட்சி ஒன்றைக் கண்டார். ஒரு சின்னப் பெண் காலில் கொலுசு ஒலிக்க அக்னியிலிருந்து தோன்றி வெளியே வருவதைக் கண்டாள். அவளைத் தொழுது அருள்பெற்ற வணிகர், அந்த தெய்வத்தையே குலதெய்வமாகக் கொண்டார். அவளே பூலூரு அம்மன் என்கிறார்கள். அவள் சௌடம்மனுக்கு அக்கா முறை என்கிறார்கள். அதன்பின் அந்த வணிகர் இனமக்களுக்கு பூலூரு அம்மனே குல தெய்வமானாள். மிகுந்த வரப்பிரசாதி.
*வடக்கேயும் வெயில் உகந்த அம்மன்
தென்னகத்தைப் போலவே வடக்கே ஹிமாச்சலப் பிரதேசத்திலும் வெயில் உகந்த, மேற்கூரை இல்லாத ஒரு அற்புத அம்மன் ஆலயம் உள்ளது. இந்த அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. இப்பகுதி மக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். இந்தக் கோயிலுக்கு ஷிகாரி தேவி கோயில் என்று பெயர். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள கர்சோக் ஜன்ஜெஹ்லி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு பழமையான கோயில். இது ஜாஞ் சேலியிலிருந்து 18 கிமீ தொலைவிலும், மண்டியிலிருந்து 94 கிமீ தொலைவிலும் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வேட்டையாடுபவர்களின் தெய்வமாக ஷிகாரி தேவி விளங்குகின்றாள். இந்தக் கோயிலுக்கு மேல் கூரை இல்லை. கடந்த காலங்களில் இந்தக் கோயிலின் மேல் கூரை கட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் ஒவ்வொரு முறையும் முயற்சி தோல்வியடைந்தது. கோயிலின் மேல் கூரை நிற்க முடியவில்லை. இன்றும் கூட, ஷிகாரி தேவி கோயில் கூரை இல்லாமல் உள்ளது.
*கூரையில்லாமல் அருளும் வெக்காளியம்மன்
திருச்சி உறையூரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்ரீ வெக்காளியம்மன். வெம்மை உகந்த காளி என்பதால் வெக்காளி அம்மன். கோடையையும் மழையையும் சமமாகக் கருதித் தாங்கும் இவளுக்குக் கருவறையின் மேலே விமானம் இல்லை. திறந்த வெளியிலே காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாள். 12 மாதங்களும் திருவிழா நடக்கும் திருக்கோயிலில், கோடைகாலமான சித்திரை மாதத்தில் சித்திரைப் பெரு
விழாவும், வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகமும், ஆனி மாதத்தில் காய்கறி அலங்கார விழாவும் நடைபெறுவது விசேஷம். இங்கே ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வருகின்றனர். பௌர்ணமி பூஜை இங்கு சிறப்பானது.
*கொங்கு நாச்சி அம்மன்
பிள்ளையாருக்கு பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டியில், கிராம தேவதையான கொங்கு நாச்சி அம்மன் கோயில் திருவிழா பத்து நாள் விமர்சையாக நடைபெறும், வைகாசி மாதம் நடைபெறும். இத்திருவிழாவில் அம்பாள் பிள்ளையார் திருவீதியே வலம் வரும். ஒன்பதாம் திருநாளில் அம்பாள் தேரில் ஸ்ரீ கொங்கு நாச்சி அம்மன் கோயிலுக்குச் சென்று மறுநாள் இரவு பிள்ளையார் சந்நதியில் பூப்பல்லக்கு நடைபெறும். திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர்.

Tags : Vekkaliamman ,Sri Pooluru Amman ,Thirumeni ,
× RELATED கடன் சுமை நீக்கும் குபேரன்